கஜா புயல் எதிரொலி: பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  Newstm Desk   | Last Modified : 19 Nov, 2018 08:48 am
echo-of-the-gaja-storm-in-the-affected-areas-holidays-for-school-colleges

கஜா புயலின் சேதம் காரணமாக திருவாரூர், நாகை, கொடைக்கானல், புதுக்கோட்டை, தஞ்சையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் மீட்பு பணிகள், சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாகை வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  மறு சீரமைப்பு பணிகள் நிறைவடையாத பகுதிகளில் அந்தந்த பள்ளி நிர்வாகமே விடுமுறை அறிவித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ், ஆசிரியர்கள் இன்று கண்டிப்பாக பள்ளிகளுக்கு சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். 

தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  கொடைக்கானல் வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் நவ.26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close