மீனவர்கள் தமிழக கடற்கரை, தென்மேற்கு வங்கக் கடலுக்கு செல்ல வேண்டாம் : வானிலை மையம்

  Newstm Desk   | Last Modified : 19 Nov, 2018 02:57 pm
weather-report-in-chennai-meteorological-center

மீனவர்கள் நாளை, நாளை மறுநாள் தமிழக கடற்கரை மற்றும் தென்மேற்கு வங்கக் கடலுக்கு செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், " நேற்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் மேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ.20) தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர பகுதிகளில் நிலைகொள்ளக்கூடும். வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறுவதற்கும் வாய்ப்புள்ளது.  இதன் காரணமாக இன்று மாலை முதல் தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கி வரும் நவ.20, 21 ஆகிய தேதிகளில் படிப்படியாக உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு முறை லேசான மழை பெய்யக்கூடும். நவ.20, 21 ஆகிய தேதிகளில் இடைவெளி விட்டு சில முறை மிதமான மழை பெய்யும். மீனவர்கள் வரும் நவ.20, 21 ஆகிய தேதிகளில் தமிழக கடற்கரை மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்லவேண்டாம்" என தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close