கேரளாவைப் போல் எதிர்கட்சிகள் இணைந்து செயல்படவில்லை: முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 20 Nov, 2018 10:52 am
we-have-asked-the-prime-minister-to-discuss-the-impact-of-the-gaja-cm

கஜா புயல் பாதிப்பு குறித்து பிரதமரை சந்தித்து விளக்கம் அளிக்க நேரம் கேட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்காக முதல்வர் பழனிசாமி இன்று சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி சென்றார். பின்னர் திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு ஹெலிகாப்டரில் சென்ற முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் புதுக்கோட்டையில் இருந்து கார் மூலம் மச்சுவாடி, மாப்பிள்ளையார்குளம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினர்.  

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், "அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் புயல் பாதிப்பு குறைந்துள்ளது. புதுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கி வருகிறது. புதுக்கோட்டை நகரத்தில் நாளை மாலைக்குள் மின் இணைப்பு வழங்கப்படும். சேதம் அடைந்த மின் கம்பங்களை சரி செய்வதற்கு வெளி மாநிலங்களில் இருந்து ஊழியர்கள் வந்துள்ளனர். கஜா புயல் பாதிப்பு குறித்து பிரதமரை சந்தித்து விளக்கம் அளிக்க நேரம் கேட்டுள்ளோம், நாளை மாலை நேரம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு முழு அறிக்கை அனுப்பி, உரிய நிதி பெறப்படும். கேரள மழையின் போது ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் இணைந்து செயல்பட்டன. அங்குள்ள எதிர்கட்சிகளை போல இங்கு இருப்பவர்கள் இல்லை"  என தெரிவித்தார்.

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close