நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

  Newstm Desk   | Last Modified : 20 Nov, 2018 11:45 am

weather-report-rain-fall-at-many-places-over-pudhucherry-and-tamil-nadu

தமிழகம் மற்றும் புதுவையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுந்த தாழ்வு நிலை மேற்கே நகர்ந்தது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும். இதனால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

இன்று வங்கக்கடலில் நாளை மற்றும் நாளை மறுநாள் 40 முதல் 50 கிலோ மீட்டர் வரையிலும் காற்று வீச்சக்கூடும். அதிகபட்சமாக நாளை 60 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை மற்றும் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். மேலும் ஆந்திரா மற்றும் தெற்கு ராயல்சீமாவில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 

தென்மேற்கு வங்கக்கடல், மன்னார்வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் இன்றும் நாளையும் செல்ல வேண்டாம்" என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தற்போது காரைக்கால், திருநள்ளாறு, திருவாரூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகறிது. 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.