கார்த்திகை பௌர்ணமி - வருடத்தில் 3 நாட்கள் கவசமன்றி மூலவர் தரிசனம்

  அனிதா   | Last Modified : 08 Dec, 2019 06:58 pm
karthikai-pournami-the-darshan-of-lord-shiva-for-3-days-a-year

கார்த்திகை பௌர்ணமி தினத்தை தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை 3 நாள் மட்டும் திருவொற்றியூர் வடிவுடையம்மன் உடனுறை படம்பக்கநாதர் திருக்கோயிலிலில் மூலவர் கவசம் திறக்கப்படுகிறது.

இந்த வருடம்  பொளர்ணமியன்று மாலை அருள்மிகு ஆதீபுரிஸ்வரருக்கு கவசம் திறந்து புனுகு சாம்பிரணி தைலாபிஷேகமும்,மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து கவசம் இன்றி காட்சி தரும் படம்பக்தநாதர் எனப்படும் ஆதீபுரிஸ்வரரை  மூன்று தினங்களுக்கு மட்டும் தரிசனம் செய்ய முடியும். மூன்றாம் நாள் இரவு 9 மணி அர்த்தஜாம பூசைக்கு பிறகு ஆதீபுரிஸ்வரருக்கு கவசம் அணிவிக்கப்படும்

அருள்மிகு படம்பக்கநாதர் சுயம்பு திருமேனியாக வருடத்திற்கு மூன்று நாள் புனுகுசாம்பிராணி தைலம் சாத்தப்பட்டு காட்சி அளிப்பார். அவரை வாசுகி நாகம் சூழ்ந்ததனால் பாம்பு போன்ற தோற்றம் திருவொற்றியூரில் மட்டும் காணமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓம் நமச்சிவாய !

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close