புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம்: புதுவை முதல்வர்

  Newstm Desk   | Last Modified : 21 Nov, 2018 10:33 am
pudhucherry-cm-announced-relief-fund-karaikaal-fishermen

கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களுக்கு நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என புதுவை முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். மேலும்  பாதிப்புகள் குறித்து மத்திய அரசிடம் நாளை இடைக்கால அறிக்கை சமர்பிக்கப்படும் என்றார். 

கஜா புயலால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இந்நிலையில் காரைக்காலில் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு  நிவாரணமாக 5ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தீவிரமடைந்துள்ள கனமழை காரணமாக பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகளுடன்  நாராயணசாமி அவசர ஆலோசணையில் ஈடுபட்டார்.

பின்னர் பேசிய அவர், கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து  மத்திய அரசிடம் நாளை இடைக்கால அறிக்கை சமர்பிக்க உள்ளோம் என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close