புதுக்கோட்டை: மின்சாரம் தாக்கியவரை தூக்கிக் கொண்டு ஓடிய அமைச்சர்

  Newstm Desk   | Last Modified : 21 Nov, 2018 12:51 pm
2-injured-by-electric-shock-in-pudhukottai

புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமா நல்லுர் அருகே மின்சாரம் தாக்கியதில் இருவர் படுகாயம் அடைந்தனர். 

புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமாநல்லூர் பகுதியில் மின் இணைப்பு சரி செய்யும் பணி நடைப்பெற்று வந்தது. அப்போது அருகிலிருந்த தனியார் கல்லூரியில் மின்சாரத்திற்காக ஜெனரேட்டரை இயக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மின் இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த முருகேசன்,மோகன் ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த அவர்கள் இருவரையும் அவ்வழியே வந்த சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனே முதல் உதவி வழங்கினார். பின்னர் அவர்களை தூக்கிச்சென்று தன்னுடைய காரில் ஏற்றி அவரே திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.தொடர்ந்து மருத்துவமனைக்கு அவரை நேரில் சென்று பார்த்துள்ளார்.

படுகாயமடைந்ததில் முருகேஷன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close