கஜா புயலில் காணாமல் போன 6 கிராமங்கள்... கதறும் மக்கள்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 21 Nov, 2018 02:10 pm
6-villages-disappeared-in-gaja

கஜா புயலின் தாக்கத்தால் ஆறு கிராமங்கள் இருந்த தடம் தெரியாமல் போய்விட்டன.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தலைஞாயிறு, அடிக்கடி புயல் பாதிப்புக்குள்ளாகும் பகுதி. இப்பகுதியைச் சேர்ந்த வேளாண் தொழிலாளியான ஜெயபால் என்பவர் கூறுகையில், ’எனது வாழ்நாளில் இதுவரை நான்கு புயல்களின் தாக்கத்தை கண்டிருக்கிறேன். ஆனால், கஜா புயலின் கோர தாண்டவம் நிலைகுலையச் செய்துள்ளது. எங்களிடம் இப்போது எதுவுமில்லை. எங்களது வீடுகள் சேதமடைந்துள்ளதால், நாங்கள் இப்போது முகாம்களில் தங்கியுள்ளோம். குழம்பு வைப்பதற்கு எங்கள் குடும்பத்திடம் மாங்காய், புளி போன்றவை கூட இல்லை. எல்லாம் போய்விட்டது. எங்கள் குடும்பத்துக்குப் பழம் கொடுப்பதற்கு புதிய மாமரத்தையோ, புளியமரத்தையோ பார்ப்பதற்கு எனக்கு வயதில்லை. 

வேளாங்கண்ணியிலிருந்து தலைஞாயிறு கிராமத்துக்குப் பயணிக்கும் வழியில் மிக மோசமான நிலையைக் காண முடிகிறது. சடையன்கொட்டகம், சேரன்குளம், காரப்பிடகை, சிந்தாமணி, பளத்தன்கரை, ஏகராஜபுரம் ஆகிய கிராமங்கள் இந்த புயலினால் காணாமல் போய்விட்டன. இப்பகுதிகளில் ஒரு மரம் கூட புயலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கவில்லை. பளத்தன்கரை கிராமம் இருந்ததற்கான தடமே தெரியவில்லை’’என்று அவர் தெரிவித்துள்ளார். 

தலைஞாயிறுவைச் சேர்ந்த சோமு இளங்கோ பேசுகையில், ‘’கஜா புயலினால் செல்போன் கோபுரங்களும் சாய்ந்துவிட்டன. மாணவர்கள் தங்களது நோட்டுப்புத்தகங்களை இழந்துவிட்டனர். பெண்களோ சாலைகளிலும், முகாம்களிலும் சமைத்து வருகின்றனர். ஆண்கள் தங்களது வீடுகளின் கூரைகளைச் சீரமைத்து வருகின்றனர். கஜா புயலால் நாங்கள் 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டோம். எங்களிடம் குடிசைகள் மட்டுமே இருந்த காலத்தில் நிலவிய சூழலை, இப்போடு மீண்டும் சந்தித்துவருகிறோம்” என்று கூறினார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close