விரட்டியடிக்கும் மக்கள்... கதறித் துடிக்கும் அமைச்சர்..!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 21 Nov, 2018 03:11 pm
people-throwing-out-the-minister

கஜா புயல் பாதித்த இடங்களை பார்வையிட கார், பைக் என எந்த வாகனத்தில் சென்றாலும் மக்கள் விரட்டி அடிப்பதால் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கண்ணீர் விட்டு கதறி வருகிறார்.

நாகை  மாவட்டம் வேதாரண்யத்தை கஜா நிர்மூலமாக்கி விட்டது. அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை. நிவாரண பணிகளை முறையாக செய்யவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தொகுதி  எம்எல்ஏவும், அமைச்சருமான ஓ.எஸ்.மணியனுக்கு எதிராக கொதிப்பில் உள்ளனர். கடந்த 17ம் தேதி வேட்டைக்காரனிருப்பு பகுதியில் சாலை மறியல் நடந்தது. அப்போது அந்த வழியாக வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காரை  சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். வேறுவழியின்றி அப்போது அமைச்சர் சுவர்  ஏறிக்குதித்து மாற்று வழியில் சென்றார். அதேபோல் 18ம் தேதி ஒரு கிராமத்தை பார்வையிட அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பைக்கில் சென்றார். பைக்கை உதவியாளர் ஓட்ட பின்னால் அமைச்சர் அமர்ந்திருந்தார். பைக்கில் அமைச்சர் வருவதை கண்ட மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதனால், உதவியாளர் பைக்கை நிறுத்தாமல் வேகமாக சென்றார். இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் சிலர் விடாமல் பைக்கில் விரட்டி சென்று வழி மறித்தனர். பைக்கில் இருந்து இறங்கிய ஓ.எஸ்.மணியனிடம், எந்த நிவாரணமும் அளிக்காமல் ஏன் எங்கள் கிராமத்துக்கு வருகிறீர்கள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மரியாதையாக பேசு என்று அமைச்சர் கூற இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் அவருடன் வந்த உதவியாளர்,  அமைச்சரை அழைத்துக்கொண்டு பைக்கில் ஏறி சென்று விட்டார். இந்த சம்பவத்துக்குபின், நேற்றுமுன்தினம் இரவு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அளித்த பேட்டியில், `கஜா  புயலால் வேதாரண்யம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவிகளை அரசிடம் பேசி பெற்றுத்தருவேன். மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்’என்று கேட்டுக்கொண்டார். அப்போது அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கண்ணீர் விட்டு அழுதார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close