திருப்பி அனுப்பியது மத்திய அமைச்சரை அல்ல, பக்தர்களின் உணர்வை: தமிழிசை ஆவேசம்

  Newstm Desk   | Last Modified : 21 Nov, 2018 08:02 pm
speech-about-sabarimala-issue

கேரளாவில் சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதை கண்டித்து, ஸ்ரீ சபரிமலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதில் பேசிய பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், திருப்பி அனுப்பப்பட்டது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அல்ல, கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வை என்றும், கேரள அரசு தனது கடைசி அத்தியாத்தை எழுதிக் கொண்டிருக்கிறது என்றும் ஆவேசத்துடன் பேசினார். 

பின்னர் பேசிய எஸ்.வி.சேகர், உச்ச நீதிமன்றத்தின் எந்த தீர்ப்பையும் நடைமுறைப்படுத்தாத கேரள அரசு, சபரிமலை தீர்ப்பை மட்டும் நடைமுறைப்படுத்துவதில் மிகவும் அவசரப்படுகிறது என்றும் இதில் பிணராயி விஜயனுக்கு உள்நோக்கம் உள்ளது எனவும் குற்றஞ்சாட்டினார். 

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் எம்.பி. இல.கணேசன், நீதிமன்ற தீர்ப்புகளின் மீதும் நீதிபதிகளின் மேல் இருந்த நம்பிக்கையையும் மக்கள் இழந்து விட்டதாக குறிப்பிட்டார். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசன், பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள்  கலந்து கொண்டனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close