சென்னையில் விடிய விடிய கொட்டும் மழை 

  சுஜாதா   | Last Modified : 22 Nov, 2018 07:50 am

heavy-rain-in-chennai

சென்னையில் நேற்று முன் இரவில் இருந்து மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.        

வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டு இருப்பதால் சென்னை மற்றும் அதன் சுற்று பகுதிகளில் இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் நிலை கொண்டு இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று) வட தமிழகத்தில், அதாவது சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் இதன் தொடர்ச்சியாக வருகிற 23-ந்தேதி வரை(இன்றும், நாளையும்) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. 

சென்னையின் முக்கிய இடமான கோடம்பாக்கம், சென்ட்ரல், எழும்பூர், அடையாறு, தரமணி, மணலி, மடிப்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close