பிரதமரை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

  Newstm News Desk   | Last Modified : 22 Nov, 2018 10:09 am

edapadi-palanisamy-met-pm-modi

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது  தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விளக்கி ரூ. 14ஆயிரம் கோடி இழப்பீடு கோரியதாக தகவல்.

கடந்த 16ம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயலால், டெல்டா மாவட்டங்கள் கடும் சேதம் அடைந்துள்ளன. பல வீடுகள், பயிர்கள், மரங்கள் என அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முழுவதையும் கஜா புயல் சீர்குலைத்துள்ளது. இந்நிலையில் சேதம் குறித்த அறிக்கையுடன் முதலமைச்சர் பழனிசாமி நேற்று மாலை டெல்லி சென்றார். அங்கு அதிமுக எம்.பி.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதையடுத்து முதலமைச்சர் இன்று காலை 9.30 மணியளவில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.  இந்த சந்திப்பின் போது,  தமிழகத்தில் கஜா புயல் பாதிப்புகளை முதல்வர் எடுத்துரைத்தார். மேலும் புயல் பாதிப்புகளுக்கு நிவாரணமாக ரூ. 14 ஆயிரம் கோடி நிதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close