கஜா புயலால் 63 பேர் பலி, 3 லட்சம் வீடுகள் சேதம்: முதல்வர் தகவல்

  Newstm Desk   | Last Modified : 22 Nov, 2018 03:21 pm
gaja-damages-and-relief-details

டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் தாக்கியதில் மொத்தமாக 63 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருப்பதாகவும் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

இன்று டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கஜா புயல் பாதிப்புகள் குறித்து கூறினார்.

அவை பின்வருமாறு:

கஜா புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 63 பேர் உயிரிழந்துள்ளனர்.
சேதம் அடைந்த வீடுகள்: குடுசை வீடுகள்: 278824 ; ஓட்டு வீடுகள்: 62996 ; மொத்தமாக: 341820

கால்நடைகள் உயிரிழப்பு : ஆடுமாடுகள்: 12298 ; பறவைகள்: 92507 ; மொத்தம்: 104805

சேதம் அடைந்த மரங்கள்: 1132686 ; அகற்றப்பட்டவை: 727399

மீட்பு முகாம்கள்: தற்போது 566 அமைக்கப்பட்டுள்ளன. அதில் 378019 பேர் தங்கி உள்ளனர். 

சாய்ந்த மற்றும் ஒடிந்த மின்கம்பங்கள்: 103508; இதில் 40 சதவீதம் சீரமைக்கப்பட்டு விட்டன; 886 மின்மாற்றிகள் தேசம் அடைந்துள்ளன. 181 துணை மின் நிலையங்கள் தேசம் அடைந்துள்ளனர். இதில் 141 சீரமைக்கப்பட்டுள்ளன. 

துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகள் 53,21,506; இதில் 40,04,452 சீரமைக்கப்பட்டுள்ளன. 

மின் சீரமைப்பு பணியில் இருப்பவர்களின் எண்ணிக்கை: 22173

குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்ட நகராட்சி பகுதிகள்: 184; பேரூராட்சி பகுதிகள் 270 252; ஊராட்சி 8522 7952.

நிரந்தர மருத்துவ முகாம்கள்: 590
நடமாடும் மருத்துவ முகாம்கள்: 2616
இதனால் பயன் அடைந்தவர்கள்: 196603

பகுதி சேதம் அடைந்த படகுகள்: 2625
முழுமையாக சேதம் அடைந்த படகுகள்: 1419

சேதம் அடைந்த வேளான் மற்றும் தோட்டக்கலை பயிற்கள்: 88102 எக்டர்
சேதம் அடைந்த தென்னை: 30000 எக்டர்
சேதம் அடைந்த நெற் பயிர்: 32706 எக்டர்

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம். படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம். சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும். 

உயிரிழந்த பசு 231 பசு மற்றும் எருமை மாடுகளுக்கு ரூ.30 ஆயிரம். காளை மாடுகளுக்கு உயிரிழப்பு நிவாரமாக ரூ. 25 ஆயிரம் (தலா). ஆடு ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரம்.

முழுவதுமாக சேதம் அடைந்த குடிசை ஒன்றுக்கு ரூ. 10 ஆயிரம். பகுதியாக சேதம் அடைந்த குடிசை ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம். தகுதி வாய்ந்த நபர்களுக்கு புதிதாக வீடு கட்ட உரிய நிதியை அரசு வழங்கும். 

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி சேலை மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வந்துள்ளன. முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்க கூடுதலாக வேட்டி, சேலை மற்றும்  4 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படும். முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு உடனடியாக வாழ்வாதார நிவாரணமாக குடும்பம் ஒன்றுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய், இதர செலவுகளுக்கு ரூ. 3,800 வழங்கப்படும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close