விமானத்தை இயக்கும் முன் தாய், பாட்டியிடம் ஆசி பெற்ற பைலட்

  Newstm Desk   | Last Modified : 23 Nov, 2018 07:51 am
indigo-pilot-touches-feet-of-mother-grandmother-before-flying-them-for-first-time

விமானத்தை இயக்குவதற்கு அதே விமானத்தில் பயணம் செய்ய அமர்ந்திருந்த தனது தாய் மற்றும் பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்கிய இண்டியோ விமானியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு இண்டியோ விமானம் ஒன்று செல்ல தயாராக இருந்தது. அதில் விமானியாக பிரதீப் கிருஷ்ணன் என்பவர் இருந்தார். இதில் அவரது தாயும், பாட்டியும் பயணம் செய்ய அமர்ந்திருந்தனர். அப்போது பிரதீப் விமானத்தை இயக்குவதற்கு முன் தனது தாய் மற்றும் பாடியிடம் வந்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார். 

பிரதீப் பைலட்டான பிறகு இயக்கும் முதல் விமானத்தில் தான் முதல் விமானப் பயணத்தை மேற்கொள்வோம் என அவரது தாயும், பாட்டியும் முன்னரே கூறியிருந்தனராம். அவர்கள் கனவை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் அவர் ஆசீர்வாதம் பெற்றுள்ளார். 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close