அடுத்த 3 நாட்களில் மழையின் அளவு குறையும்: வானிலை ஆய்வு மையம்

  Newstm Desk   | Last Modified : 23 Nov, 2018 12:12 pm

balachandran-weather-report

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது எனவும் டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நேற்று தமிழகத்தின் உள் பகுதியில் நிலவி வந்த குறைந்த  காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. தற்போது குமரி மற்றும் உள்மாவட்டங்களில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. 

கடந்த 24 மணி நேரம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக செங்கல்பட்டில் 18 செ.மீட்டர் மழையும் மதுராந்தகத்தில் 14 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் 

நாளை முதல் அடுத்த மூன்று நாட்களில் (அதாவது நவம்பர் 24, 25, 26 ஆகிய தேதிகளில்) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையின் அளவு படிப்படியாக குறையும்" என்றார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close