பாதிக்கப்பட்ட 12 மாவட்ட மக்களுக்கு தார்பாய் வழங்க முதல்வர் உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 23 Nov, 2018 04:45 pm
cm-edappadi-palanisamy-orders-district-collectors-to-give-temporary-sheet-to-people

புயல் பாதித்த 12 மாவட்டங்களில் தற்காலிக கூரை அமைக்க தார்பாய் வழங்க அம்மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை புரட்டிபோட்டுள்ள கஜா புயலால் பெரும்பாலான இடங்கள் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. வீடு மற்றும் உடமைகளை இழந்த மக்கள், உணவு கூட கிடைக்காத ஒரு சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர். தங்கள் பிள்ளைகள் போல வளர்த்த பயிர்கள், மரங்கள் அழிந்து போயுள்ளன. மொத்தமாக டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாவட்டங்களில் அரசியல் தலைவர்கள் பலர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பல்வேறு தரப்பில் இருந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு தரப்பில் இருந்தும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு தற்காலிக கூரை அமைக்க தார்பாய் வழங்க  12 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close