புயலால் பாதிக்கப்பட்ட மாநகராட்சிகளுக்கு 100 சதவீதம் மின் விநியோகம்

  Newstm Desk   | Last Modified : 23 Nov, 2018 05:10 pm
tamil-nadu-electricity-and-distribution-corporation-report

புயலால் பாதிக்கப்பட்ட மாநகராட்சிகளுக்கு 100 சதவீதமும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு 95 சதவீதமும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை மாநகராட்சிகளில் மொத்தம் 10,68,589 மின் இணைப்புகள் சீரமைக்கப்பட்டு 100 சதவீதம் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், திண்டுக்கல், சிவகங்கை, கடலூர் மாவட்ட நகராட்சிகளில் பாதிக்கப்பட்ட 10,57,536 மின் இணைப்புகளில் 9,55,699 மின்  இணைப்புகளுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டள்ளது. மீதியுள்ள மின் இணைப்புகளுக்கு நாளை பிற்பகலுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும். இதேபோல், பேரூராட்சிகளில் புயலால் பாதிக்கப்பட்ட 10,68,343 மின் இணைப்புகளில் 998762 மின் இணைப்புகளுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.  மீதியுள்ள மின் இணைப்புகளுககு நாளை பிற்பகலுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும். பாதிக்கப்பட்டுள்ள 12 மாவட்டங்களிலுள்ள ஊரகப்பகுதிகளுக்கு ஒரு வாரத்திற்குள் அனைத்து மின் இணைப்புகளுக்கும் மின் விநியோகம் வழங்கிட கூடுதல் பணியாளர்களை கொண்டு மின் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close