விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி மண்ணில் புதைந்து ஆர்ப்பாட்டம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 23 Nov, 2018 06:12 pm
farmers-protest

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நியாமான இழப்பீட்டுத்தொகை வழங்க கோரி காவிரி ஆற்று மணலில் புதைந்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 16 ஆம் தேதி கஜா புயலால் டெல்டா மாவட்டம் முழுவதும் கடும் பாதிப்புக்கு உள்ளானது. இதில் விவசாயிகள் தம் விவசாய நிலங்களில் இருந்த விளைபொருட்கள் நெல், தென்னை, வாழை, கரும்பு, பாமாயில், கொய்யா போன்ற எண்ணற்ற பயிர்கள் கஜா புயலால் ஓடிந்துவிழுந்தும், நீரில் மூழ்கியும் அழிந்ததால் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கதியாய் நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

8 வழி சாலைக்கு விவசாய நிலங்களை எடுக்கும்போது பாதிப்புக்கு உண்டான விவசாய பயிர்களுக்கு கொடுக்கப்பட்ட இழப்பீட்டு தொகையில் பாதி அளவு கூட கஜா புயலில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு வழங்கவில்லை. கஜா புயலால் தம் வாழ்வாதாரத்தை இழந்து நிற்க்கும் விவசாயிகளுக்கு உரிய நியாமான இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை விரைந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் காவிரி ஆற்றுக்குள் மணலில் புதைந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close