10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 50 ஆயிரம் ரூபாயை பறிகொடுத்த நபர்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 23 Nov, 2018 08:48 pm
robbery-at-chennai

ரூ. 10 நோட்டுக்களை சாலையில் வீசி ரூ. 50 ஆயிரத்தை பறித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நூதன கொள்ளை சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் சிக்கியது.

சென்னை கொட்டிவாக்கம் திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பூமிநாதன் (59). தண்டல் பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று திருவான்மியூர் மேற்கு குளக்கரை தெருவில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்றார். தன் வங்கி கணக்கில் இருந்து  பணத்தை எடுத்து கொண்டு மார்க்கெட் சென்று பொருட்கள் வாங்கி கொண்டு சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை புத்து கன்னியம்மன் கோவில் அருகில் செல்லும் போது சைக்கிள் பின்‌ சக்கரத்தில் துணி மாட்டி கொண்டதால் இறங்கி எடுத்தார். அப்போது பின்னால் வந்த ஒருவர் பூமிநாதனை பார்த்து உங்கள் பணம் கீழே கிடக்கிறது என்று சொல்லவே பூமிநாதன் தனது அருகே இருந்த ரூ. 10 நோட்டுகளை எடுத்த போது அந்த நபர் பண பையை பறித்து கொண்டு ஓடி விட்டார். அந்த பைக்குள் ரூ. 50 ஆயிரம், 2 பாஸ்புக் இருந்தது. 

இது குறித்து பூமி நாதன் திருவான்மியூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பணத்தை ஒருவன் திருடிச்சென்று பைக்கில் ஏறிசெல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளையில் 3 பேர் ஈடுபட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close