கஜா புயல்: சென்னை வந்தது மத்திய குழு

  shriram   | Last Modified : 23 Nov, 2018 08:43 pm
gaja-cyclone-center-committee-arrives-in-chennai

கஜா புயலினால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ள நியமிக்கட்ட மத்திய குழு சென்னை வந்தடைந்தது. முதல்வரை சந்தித்த பின் நாளை முதல் ஆய்வுகள் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் தமிழகத்தின் கிழக்கு மாவட்டங்களை தாக்கிய கஜா புயலால், கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் கண்டு ஆய்வு செய்ய மத்திய அரசு, குழு ஒன்றை நியமித்தது. உள்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்ட்ஸ் தலைமையிலான இந்த குழு, இன்று மாலை சென்னை வந்தடைந்தது.

நாளை காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மத்திய குழு பேச்சுவார்த்தை நடத்துகிறது. பின்னர், சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்கின்றனர். முதலில் புதுக்கோட்டையில் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய உள்ளனர். அங்கிருந்து நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு சென்று 3 நாட்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close