தொடர் மழை: 5 மாவட்டங்களுக்கு விடுமுறை

  Newstm Desk   | Last Modified : 24 Nov, 2018 07:51 am
rain-holiday-in-4-districts

தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக நாகை, திருவாரூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், தஞ்சை, தருமபுரி, திருச்சியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். 

கடந்த 16ம் தேதி தாக்கிய கஜா புயலின் பாதிப்புகளில் இருந்து இன்னும் டெல்டா மாவட்டங்கள் மீண்டு வரவில்லை. இந்நிலையில் அந்த பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதே போல புயல் பாதிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நாகை மற்றும் திருவாரூர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மேலும் தஞ்சை, தருமபுரி மற்றும் திருச்சியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக நிவாரண பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close