கஜா புயல்: முதல்வருடன் மத்திய குழு இன்று ஆலோசனை

  Newstm Desk   | Last Modified : 24 Nov, 2018 08:38 am
chief-minister-to-discuss-with-centre-team-about-gaja-effects

டெல்டா மாவட்டங்களை கடுமையாக பாதித்துள்ள கஜா புயல் தாக்குதல்கள் குறித்து ஆய்வு செய்ய நேற்று தமிழகம் வந்த மத்திய குழு இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்த உள்ளது.

டெல்டா மாவட்டங்களை கடுமையாக பாதித்துள்ள கஜா புயலின் தாக்கத்தில் இருந்து இன்னும் மீளமுடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதில் பலர் உயிரிழந்தனர். பலர் வீடு, உடைமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

இதுகுறித்து இரு தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பிரதமரை சந்தித்து விளக்கினார். மேரும் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி கோரியுள்ளார். இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர்டேனியல் ரிச்சர்டு தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் ஆர்.பி.கவுல், வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையின்  இயக்குனர்  பி.கே.ஸ்ரீவத்சவா, மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சக துணைச் செயலாளர் மாணிக்சந்திர பண்டிட், மத்திய எரிசக்தித்துறை தலைமை பொறியாளர் வந்தனா சிங்கால், மத்திய நீர் ஆதாரத்துறை இயக்குனர் ஜெ.ஹர்ஷா, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக கண்காணிப்பு பொறியாளர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் நேற்று இரவு 8 மணியளவில் விமானம் மூலம் சென்னை வந்தனர். இன்று காலை 10.15 மணியளவில் சென்னை தலைமை செயலகத்துக்கு குழுவினர் வருகின்றனர். 10.30 மணிக்கு அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசுகின்றனர். பின்னர் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

இந்த சந்திப்பின்போது வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், வருவாய் துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்பட முக்கிய அரசு துறைகளின் செயலாளர்கள் மத்திய குழுவினருடன் ஆலோசனை செய்வார்கள்.

அதன் பிறகு இன்று பிற்பகல் 2.45 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மத்திய குழுவினர் திருச்சிக்கு செல்கின்றனர். பின்னர் புயல் பாதிப்பு பகுதிகளுக்கு சென்று அவர்கள் ஆய்வு செய்ய இருக்கின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close