2வது நாளாக கஜா பாதிப்பு பகுதிகளை பார்வையிடும் மத்திய குழு

  Newstm Desk   | Last Modified : 25 Nov, 2018 07:55 am
centre-team-examined-gaja-affected-areas

கஜா புயலால் கடுமையாக பாதிப்படைந்துள்ள டெல்டா  பகுதிகளை மத்திய குழுவினர் இரண்டாவது நாளாக இன்றும் பார்வையிட்டு சேதங்களை மதிப்பிட உள்ளனர். 

கஜா புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய நிதித்துறை இணைச் செயலாளர் தலைமையிலான 7 பேர் கொண்ட மத்தியக் குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். நேற்று புதுக்கோட்டை, தஞ்சை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு சேத விவரங்களை மதிப்பிட்டனர். இன்று காலை 7 மணிக்கு தஞ்சையில் மீண்டும் ஆய்வை தொடர்கின்றனர். அங்கு பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் அவர்கள் புயல் சேதங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிய உள்ளனர்.

பின்னர் மாலை 3 மணிக்கு திருவாரூர் மாவட்டத்தில் புயல் சேதங்களை பார்வையிட உள்ளனர். திங்கள்கிழமை நாகை மற்றும் வேதாரண்யத்தை பார்வையிடும் இவர்கள், இறுதியாக காரைக்கால் மற்றும் புதுவையில் ஆய்வு பணிகளை நிறைவு செய்ய உள்ளனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close