புயல் நிவாரண நிதியை பெற முழு முயற்சி எடுப்போம்: துணை சபாநாயகர் தம்பிதுரை

  Newstm Desk   | Last Modified : 25 Nov, 2018 12:50 pm

we-will-take-full-effort-to-get-the-storm-relief-fund-deputy-speaker-thambidurai

புயல் நிவாரண நிதியை பெற முழு முயற்சி எடுப்போம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்தால்தான் உரிய நிவாரண நிதி கிடைக்கும். புயல் சேதங்களை பார்வையிட்ட மத்திய குழுவும் பெரிய பாதிப்புதான் என கூறியுள்ளது. காவிரி பிரச்னையில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வெற்றி பெற்றது போல் புயல் நிவாரண நிதியை பெற முழு முயற்சி எடுப்போம்" என கூறினார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close