ஆந்திராவில் இருந்து மின்கம்பங்கள் இறக்குமதி: அமைச்சர் தங்கமணி தகவல்

  Newstm Desk   | Last Modified : 25 Nov, 2018 12:51 pm
electricity-works-are-underway-minister-thangamani

ஆந்திராவில் இருந்து மின்கம்பங்கள் வரவழைக்கப்பட்டு மின்இணைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின் ஊழியர் முருகேசன், கடந்த 20ம் தேதி மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், திருச்செங்கோட்டியில் உள்ள முருகேசனின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய அமைச்சர் தங்கமணி, மின்வாரியம் சார்பில் ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, " புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் சீரமைப்பு பணிக்கு முதற்கட்டமாக மத்திய அரசு ரூ.200  கோடி வழங்கியுள்ளது. புயலால் அதிகளவில் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதால், ஆந்திராவில் இருந்து மின்கம்பங்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.  ஊரகப் பகுதிகளில் இன்னும் ஒருவாரத்தில் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும்" என தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close