புதுச்சேரியில் பாஜக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம்...!

  Newstm Desk   | Last Modified : 26 Nov, 2018 08:36 am
sabarimala-issue-bjp-strike-in-pondicherry

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் செயல்பாடுகளை கண்டித்து புதுச்சேரியில் இன்று பா.ஜ.க சார்பில் முழுஅடைப்பு போராட்டம்  நடைபெறுகிறது. இதனால் பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. 

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராரட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டதால், அதில் பலரை கேரள அரசு கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்தது. இந்த முழு அடைப்பு போராட்டத்தை காரணம் காட்சி அரசு அதிகாரிகள் யாரும் விடுமுறை எடுக்க கூடாது எனவும், மீறி எடுக்கும்  பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி தலைமைச்செயலாளர்  அரசு ஊழியர்களை எச்சரித்துள்ளார். 

காலை முதல் முழு அடைப்பு போராட்டம் காரணமாக பெரும்பாலான தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. புதுச்சேரியில் இயங்கும் அரசு மற்றும் தனியார்  பேருந்துகள் காவல் துறையினரின் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி நகர் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், புதுச்சேரியில் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும், விடுமுறை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close