கஜா புயல் குறித்து கிரிக்கெட் மைதானத்தில் தெரியப்படுத்திய தமிழ் இளைஞர்கள்..!

  Newstm Desk   | Last Modified : 26 Nov, 2018 09:30 am
tamil-youth-who-showed-up-on-the-cricket-stadium-about-the-gaja-storm

கஜா புயல் பாதிப்பு குறித்து சர்வதேச அளவில் தெரியப்படுத்தும் முயற்சியாக சிட்னி கிரிக்கெட் மைதானத்தில், கஜா புயலுக்கு நிவாரணம் தாரீர் என்ற வாசகம் எழுதிய பதாகைகளுடன் இளைஞர்கள் சிலர் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

தமிழகத்தை தாக்கிய கஜா புயலால், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பெரும் பேரழிவை சந்தித்துள்ளது. தென்னை, பலா, மா உள்ளிட்ட லட்சக்கணக்கான மரங்கள் வீழ்ந்துள்ளன. மின் கம்பங்கள் சரிந்ததால், பல கிராமங்களில் இன்று மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். பலர் முகாம்களில் தங்கியுள்ளனர். பல கிராமங்கள் மற்றும் நகரங்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. 

இந்நிலையில், இத்தகைய பேரழிவை சர்வதேச அளவில் தெரியபடுத்தும் விதமாக தமிழக இளைஞர்கள் சிலர், நேற்று சிட்னியில்  நடைபெற்ற ஆஸ்திரேலியா - இந்தியா இடையேயான டி20 போட்டியின் போது, மைதானத்தில் "டெல்டாவை பாதுகாப்போம், கஜா புயலுக்கு நிவாரணம் தாரீர், தமிழ்நாடு விவசாயிகளை காப்பாற்றுவோம்" என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகளை கையில் ஏந்தி நின்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close