கஜா பாதிப்புக்கு ஹைட்ரோகார்பன் திட்டம்தான் காரணம்: திருமாவளவன்

  ஐஸ்வர்யா   | Last Modified : 26 Nov, 2018 05:23 pm
thirumavalavan-press-meet

கஜா புயலால் தமிழகத்தின் மைய பகுதி மட்டுமல்லாமல், உட்புற பகுதிகளும் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதற்கு காரணம் ஹைட்ரோகார்பன் திட்டம்தான் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். கஜா புயலால் தமிழகத்தின் மைய பகுதி மட்டுமல்லாமல், உட்புற  பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் ஹைட்ரோ கார்பன் திட்டம்தான். கஜா புயலினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு தர வேண்டும்.

கஜா புயல் தாக்குதலை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். டிசம்பர் 10ல் திருச்சியில் தேசிய மாநாடு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற உள்ளது. இதில் ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு போன்ற தேசிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் ஆணவக்கொலைகள் அதிகரித்துள்ளது.

நாடு 2500 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆணவக்கொலைகளை தடுக்க தமிழக அரசு கடுமையான சட்டம் இயற்ற வேண்டும். நாட்டின் நலனை கருத்தில் கொள்ளாமல் வன்முறையை தூண்டிவிடுவதிலேயே பாஜக மும்முரமாக செயல்பட்டு வருகிறது. மத்தியகுழு உண்மையாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். புயல் விவகாரத்தில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது பாராட்டதக்கது. ஆனால் இன்னும் பல இடங்களில், நிவாரணம் சேராமல் இருப்பதினால், அரசின் மீது மக்கள் கோபமாக உள்ளனர். இடைத்தேர்தல் தனியாக வந்தால் விடுதலை சிறுத்தைகள் தேர்தலில் நிற்காது” என்று கூறினார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close