உள்ளாட்சி தேர்தல் நடத்தியிருந்தால் கஜா பாதிப்பிலிருந்து தப்பியிருக்கலாம்: டிடிவி தினகரன்

  ஐஸ்வர்யா   | Last Modified : 26 Nov, 2018 06:25 pm
ttv-dhinakaran-tweet-about-gaja

உள்ளாட்சி தேர்தல் உரிய நேரத்தில் நடந்திருந்தால், உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களோடு சேர்ந்து புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டிருப்பார்கள். அதன்மூலம், மக்கள் இவ்வளவு பெரிய பாதிப்புக்கு உள்ளாகாமல் காத்திருக்கலாம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

 

 

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை புரட்டிபோட்டுள்ள கஜா புயலால் மக்கள் தங்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.  கஜா' புயலால், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் அரசு தரப்பில் இருந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பல்வேறு தரப்பில் இருந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 

 

இந்நிலையில் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “உள்ளாட்சி தேர்தல் உரிய நேரத்தில் நடந்திருந்தால், உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களோடு சேர்ந்து புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டிருப்பார்கள். அதன்மூலம், மக்கள் இவ்வளவு பெரிய பாதிப்புக்கு உள்ளாகாமல் காத்திருக்கலாம்! மத்திய மாநில அரசுகளிடமிருந்து உரிய நிவாரணத்தை பெற்றுத்தரும் வரை பாதிக்கப்பட்ட மக்களோடு அமமுக தோளோடு தோள் நின்று போராடும். மக்கள் மிகுந்த கொதிப்பான மனநிலையில் உள்ளனர். மீண்டும் வலியுறுத்த விரும்புவது, அரசு அதிகாரிகள் கிராமம்தோறும் சென்று மக்களை சந்தித்து அவர்களுக்கான கணக்கீடு பணிகளும், நிவாரணத்திற்கான உத்தரவாதத்தையும் தந்தால் மட்டுமே அவர்களது மனநிலையில் மாற்றம் ஏற்படும். கஜா புயல் கரையைக் கடந்து பத்து நாட்கள் முடிந்தும் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் அரசு அதிகாரிகள் இதுவரை சேத மதிப்பீட்டு பணிகளை துவங்கவில்லை என மக்கள் தங்களின் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்” என பதிவிட்டுள்ளார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close