டெல்லியில்  முற்றுகை போராட்டம்: விவசாயிகள் சங்கம்

  டேவிட்   | Last Modified : 27 Nov, 2018 04:54 pm
farmers-struggle-in-delhi

கஜா புயலில் பாதித்த மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசிற்கு எதிராக டிச.29,30 ஆகிய தேதிகளில் டெல்லியில்  முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக தென்னிந்திய விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

டெல்லி செல்லும்முன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியபோது, கஜா புயலில் பாதித்த மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசிற்கு எதிராக தென்னிந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் டிச.29,30 ஆகிய தேதிகளில் டெல்லியில்  முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் தென்னிந்திய விவசாய சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கத்தை சேர்ந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளவார்கள் என்றும், கஜா புயல் காரணமாக மத்திய அரசிடம், மாநில அரசு கோரிய 15 ஆயிரம் கோடி நிதி போதாது, 1 லட்சம் ரூபாய் கோடி நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close