சென்னை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு 30 லட்சம் விபத்து காப்பீடு!

  Newstm Desk   | Last Modified : 28 Nov, 2018 01:41 pm
chennai-accident-relief-fund

விபத்தின்போது இறந்த தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவலர் குடும்பத்திற்கு தனியார் வங்கி மூலம் விபத்து காப்பீடாக ரூ.30 லட்சத்தை ஆயுதப்படை கூடுதல் காவல் இயக்குநர் ஷகீல் அக்தர் வழங்கினார்.

தமிழ்நாடு ஆயுதப்படை சிறப்பு காவலராக பணிபுணிந்தவர் விக்னேஷ். இவர் கடந்த ஜனவரி மாதம் 11ஆம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தின் காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் விக்னேஷ் தனது வங்கி கணக்கை ஆக்ஸிஸ் வங்கியில் வைத்திருந்த காரணத்தால், அவரது உயிரிழப்பிற்கான விபத்து காப்பீடு தொகையாக 30 லட்சம் ரூபாய் காசோலையாக ஆக்ஸிஸ் வங்கி சார்பில் வழங்கப்பட்டது.  

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள ஆயுதப்படை தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விபத்து காப்பீடு தொகை ரூ.30 லட்சத்திற்கான காசோலையை அவரது குடும்பத்தினருக்கு ஆயுதப்படை கூடுதல் இயக்குநர் ஷகீல் அக்தர் வழங்கினார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த ஷகீல் அக்தர், சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் விக்னேஷுக்கு ஆக்ஸிஸ் வங்கியின் மூலம் விபத்து காப்பீடாக ரூ.30 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதே போன்று மற்றொரு காவலர் குடும்பத்தினருக்கும் விபத்து காப்பீடு தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஆயுதப்படை காவலர்களின் மன அழுத்தங்களை குறைப்பதற்காக முதல்வரின் அறிவுறுத்தலின்படி பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் இதுபோன்ற முயற்சிகள் மிகவும் அவசியமானது எனவும் தெரிவித்தார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close