தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

  Newstm Desk   | Last Modified : 29 Nov, 2018 12:17 pm
weather-forecast

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த்துள்ளது. 

இன்று  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தென் தமிழகத்தின் கடற்கரைப்பகுதிகளில் குறைந்த  காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும் மாலத்தீவு வளிமண்டல பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி  நிலவுகிறது. 

கடந்த 24 மணி நேரத்த்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  புதுக்கோட்டை, காரைக்கால், கடலூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அந்தளவுக்கு மழை இருக்காது" என தெரிவித்தார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close