மேகதாது விவகாரத்தில்  மேல்முறையீடு செய்வது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் : அமைச்சர் ஜெயகுமார்

  Newstm Desk   | Last Modified : 29 Nov, 2018 05:22 pm
consult-with-legal-experts-to-appeal-to-the-supreme-court-will-be-decided-minister-jayakumar

மேகதாது விவகாரத்தில்  மேல்முறையீடு செய்வது குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், " கஜா புயல் மீனவர்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக பாதித்துள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் ரூ.1300 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. நிவாரண நிதிகள் மக்களை சென்றடைவதற்கு நடுவே அதிகாரிகளின் தலையீடு இருக்காது. நிவாரண தொகை நேரடியாக அவரவர் வங்கிக் கணக்குகளுக்கு சென்றடையும் என தெரிவித்தார்.

மேலும், முதல்வர் பிரதமரை சந்தித்து புயல் பாதிப்பு குறித்து கூறிய அன்றே மத்திய குழு அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்து பார்வையிட்டுச் சென்றனர்.மத்திய அரசு மனசாட்சியுடன் தேவையான நிதியை அளிப்பார்கள். இந்த புயல் சேதத்தை வைத்து அரசியல் செய்யவில்லை. மனித நேயத்துடனேயே அனைவரும் செயல்பட்டு வருகிறோம்.

மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திற்கு எதிராக பேசுவது சரியல்ல. இந்த விவகாரத்தில் என்ன செய்ய இயலுமோ அதை நிச்சயமாக செய்வோம். மேல்முறையீடு குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாநில அரசின் அனுமதி இல்லாமல் ஆலையை திறப்பது இயலாத காரியம். தமிழக அரசு முடிவை மாற்றிக் கொள்ளாது

முருகதாஸ் இலவசங்கள் குறித்து சர்ச்சையை கிளப்புவது தவறு. தேவையானவற்றை அளிப்பது குறித்து குறை கூறக்கூடாது.  மாணவர்கள் உட்பட அனைவரும் அரசு அளிக்கும் இலவசங்கள் மூலம் பயனடைந்து வருகின்றனர். திரைப்படத்திற்காக அரசின் திட்டங்களை குறைகூறுவதை மக்கள் ஏற்கமாட்டர்கள். கருத்து சுதந்திரம் என்பது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அது சார்புத்தன்மை வாய்ந்ததாக இருக்கக்கூடாது என கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close