சிலைக்கடத்தல்: சிபிஐ விசாரணைக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

  Newstm News Desk   | Last Modified : 30 Nov, 2018 09:46 am

chennai-hc-to-give-verdict-on-idol-wing-case

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த அரசாணையை எதிர்த்த தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஐ.ஜி.பொன்.மணிக்கவேல் விசாரித்து வந்தார். இந்த நிலையில், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி, தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக, அரசாணை வெளியிடப்பட்டதாக குற்றம்சாட்டினர். 

இதனை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. கடந்த 22ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, சிபிஐ அமைப்பிடம் அனுமதி பெறாமல் அரசாணை பிறபித்தது ஏன் என தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இந்த வழக்கில் இன்று பிற்பகலில் தீர்ப்பு வெளியாகவுள்ளது. இன்று ஐ.ஜி.பொன்.மணிக்கவேல் பணி ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.