ராணுவத்தில் பெண்கள் சேர வேண்டும் : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 10:06 am
union-minister-nirmala-sitharaman-calls-on-women-to-join-army

ராணுவத்தில் ஏராளமான பெண்கள் சேர வேண்டும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாணவிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

சென்னை, ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மெட்ராஸ் கிழக்கு ரோட்டரி கிளப் சார்பில் ரூ.95 லட்சம் மதிப்பிலான சிறந்த கல்வி மற்றும் பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டது. இதனை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், " பெண்களுக்கு கல்வி என்பது புது சிந்தனை அல்ல. பழமையான ரிக் முதலான வேதங்களை வழங்கியவர்களில் 22 பேர் பெண்கள். அந்த வகையில், சுவாமி ஸ்ரீ ராமகிருஷ்ணரே அன்னை சாரதா தேவியை குரு ஸ்தானத்தில் வைத்திருந்தார் என்றால் அவர் எப்படிப்பட்டவராக இருந்திருக்க வேண்டும். எனவே, அறிவை வளர்ப்பதில் பெண்களின் பங்கு நம் நாட்டில் எப்போதும் இருந்து இருக்கிறது. எனவே, தற்போதைய நவீன கல்வி யுகத்தில், கல்வி கற்றல் குறைபாடு உள்ள மாணவிகளையும் சக மாணவிகளுடன் வைத்து கற்றுக் கொடுத்தால், அவர்களும் சமூகத்தில் சமமாக இருக்க முடியும். அதன் முதற்கட்டமாக அவர்களுக்கு என சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என கூறினார். 

மேலும், மாணவிகளுடன் ½ மணி நேரம் இருந்தாலும் நான் ஊக்கம் பெற்றதாக கருதுவேன். இன்று மாணவிகளுடன் அதிக நேரம் இருந்தமையால் முழு ஊக்கம் பெற்றதாக கருதுகிறேன். 14 லட்சம் பேர் கொண்ட நமது ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே உங்களில் நிறைய பேர் ராணுவத்தில் சேர வேண்டும். இன்று பள்ளிச் சீருடையில் பார்க்கும் உங்களில் பலரை இன்னும் 5 வருடங்கள் கழித்து விமானப்படை சீருடையிலோ, கப்பல்படை சீருடையிலோ, ராணுவ சீருடையிலோ பார்க்க வேண்டும் என கூறினார்.

newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close