மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதால் பயன் இல்லை: சரத்குமார்

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 10:30 am
all-party-meetings-in-the-meghadad-dam-issue-are-not-useful-sarath-kumar

மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் தமிழக அரசுடன் இணைந்து அழுத்தம் கொடுக்கலாமே தவிர அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதால் எந்த பயனும் இல்லை என சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் சரத்குமார் தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் சரத்குமார், நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயலால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேரில் வந்து பார்த்த போது உண்மையான சேத விபரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசு தங்களால் இயன்ற அளவு நிவாரண பணிகளை செய்து வருகிறது. அரசு ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்களின் பங்கு பாராட்டத்தக்கது. மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதிபெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையை வழங்க வேண்டும். தற்போது மேகதாது அணை கட்ட மத்திய அரசு ஆய்வுக்காக அனுமதி அளித்து உள்ளது வருத்தம் அளிக்க கூடிய செயல். அதற்காக அனைத்து கட்சிகளும் தமிழக அரசுடன் இணைந்து அழுத்தம் கொடுக்கலாமே தவிர அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதால் எந்தவிதமான பயனும் இல்லை.தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று ஆய்வறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது. அதன் உண்மை நிலையை தெரிந்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என கூறினார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close