ராணுவ விமானத்தில் தென்னை கன்றுகளை கொண்டு வருவேன்: நிர்மலா சீதாராமன்

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 10:19 am
nirmala-seetharam-in-puthukottai

கஜா பாதிப்பு பகுதிகளில்  வழங்க போதிய தென்னங்கன்றுகள் இல்லை என்றால் பிற மாநிலங்களில் இருந்து ராணுவ விமானத்தை பயன்படுத்தி தென்னை கன்றுகளை கொண்டு வருவேன் என புதுக்கோட்டையில் பேசிய நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு செய்தார். நெடுவாசல் பகுதியில் மக்களிடம் குறைகளை கேட்ட அவர் பின்னர் அவர்களிடம் பேசினார். அப்போது, "புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தரப்படும்.

ஒவ்வொருவரும் தாங்கள் இழந்த மரங்கள் குறித்த தகவல்களை அதிகாரிகளிடம் சரியாக தெரிவியுங்கள். உங்களுக்கு உரிய உதவிகளை மத்திய அரசு செய்யும்.

மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலம் அனைவருக்கும் தென்னை கன்று வழங்க உத்தரவிடப்படும். நமது மாநிலத்தில் உரிய அளவிலான தென்னை கன்றுகள் இல்லை என்றால். வெளி மாநிலங்களில் இருந்து ராணுவ விமானம் மூலம் தென்னை கன்றுகள் இங்கு கொண்டு வரப்படும். மின்சாரம் இன்னும் நமக்கு வரவில்லை. அதற்கான உரிய பணிகள் நடைபெற்று வருகிறது. நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்"என்றார். 

ஆய்வின் போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பா.ஜ.க தலைவர்கள் தமிழிசை மற்றும் எச்ராஜா ஆகியோர் இருந்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close