சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு புதிய ஏ.டி.ஜி.பியாக அபய்குமார் சிங் நியமனம்

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 10:54 am
abahy-kumar-singh-appointed-as-idol-wing-ig

சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெறுவதையடுத்து புதிய ஏ.டி.ஜி.பியாக அபய் குமார் சிங்கை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் என்றாலே தமிழக மக்கள் அனைவருக்கும் பரீட்சையமானவர். இவரது பேச்சும் சரி, நடவடிக்கையும் சரி அதிரடி தான். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடு போன தஞ்சை கோவிலுக்கு சொந்தமான ராஜராஜ சோழன் மற்றும் உலோக மாதேவி சிலைகளை மீட்டுக்கொண்டு வந்த அனைத்து மக்களின் மனதிலும் இடம் பிடித்தார். அவரது இந்த வீர தீர செயலுக்கு தமிழக அரசு உள்பட அனைவரும் பாராட்டு தெரிவித்தனர். சிலைகள் மீட்கப்பட்டதையடுத்து, அதனை தஞ்சை மக்கள் பெரும் விழாவாகவும் கொண்டாடினர். 

மேலும், அவரை சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் இருந்து ரயில்வே ஐ.ஜியாக மாற்றம் செய்யப்பட்டபோது, அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பின்னர், நீதிமன்றம் அவரிடமே வழக்குகளை ஒப்படைக்க உத்தரவிட்டது. இதன்படி தான் அவர் சிலைகடத்தல் வழக்குகளை விசாரித்து வந்தார். 

இந்நிலையில் இன்று அவர் ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து புதிய ஏ.டி.ஜி.பியாக அமய்குமார் சிங் நியமனம் செய்துள்ளது. இவர் இதற்கு முன்பு தமிழ்நாடு காகித நிறுவனத்தில் ஊழல் தடுப்பு துறை தலைமை அதிகாரியாக இருந்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close