விவசாயிகளை பாதுகாக்காத அரசு தேசப்பற்று பற்றி பேசுகிறது: கனிமொழி ட்வீட்

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 12:37 pm
kanimozhi-tweet-about-kissan-march

விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திவரும் நிலையில், இப்போராட்டம் குறித்து திமுக மகளிரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், "தமிழக விவசாயிகள் டெல்லி வீதிகளில் நிர்வாண போராட்டம் நடத்தியபோதே, பிரதமர் மோடி ஓடி வந்து ஆறுதல் என்னும் ஒற்றைத் துணி கொண்டு மூடி மறைக்காததன் விளைவே இன்று லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.

விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்காத அரசு தேசப்பற்று பற்றி பேசுகிறது' என பதிவு செய்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close