மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளித்தார் அமைச்சர் காமராஜ்

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 01:23 pm
minister-kamaraj-petition-requested-to-union-minister-nirmala-seetharaman

கஜாபுயல் பாதிப்பை பார்வையிட வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நிவாரணநிதியை உடனடியாக வழங்க கோரி மனு அளித்தார். 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியில், கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். முன்னதாக,  தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, மத்திய அரசு உடனடியாக நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொண்டதோடு, கோரிக்கை மனு அளித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "மத்திய அரசு உதவி செய்ய தயாராக உள்ளது. எதிர்கட்சியும் மத்தியக்குழுவிடம் பாதிப்பு மற்றும் மக்கள் குறைகளை பற்றி கூறியிருக்கலாம். மாநில அரசு கேட்டுக்கொண்டால்தான் ராணுவம், நேவி போன்றவை அனுப்பப்படும். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிசம்பர் 7 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக்கட்டணம் 8ம் தேதி வரை செலுத்தலாம்" என கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close