புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் தரையிறக்கம்; உயிர் தப்பிய பயணிகள்!

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 01:28 pm

chennai-spicejet-flight-emergency-landing

சென்னையிலிருந்து கோழிகோட்டிற்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் அதில் பயணித்த 63 பயணிகல் உயிர் பிழைத்தனர். 

சென்னையிலிருந்து காலை 7 மணிக்கு கோழிக்கோட்டிற்கு 59 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்களுடன் ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்பட்டது. வானில் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இயந்திர கோளாறை உடனடியாக கண்டறிந்ததால் விமானத்திலிருந்த 63 பேரும் உயிர் தப்பினர்.

பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதேபோன்று, மதுரைக்கு செல்ல இருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்திலும் கோளாறு ஏற்பட்டதால், சேவை ரத்து செய்யப்பட்டது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close