இணையதள குற்றங்கள் தொடர்பாக 10 ஆயிரம் வழக்குகள் பதிவு: ஏ.கே.விஸ்வநாதன்

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 03:58 pm
10-thousand-cases-registered-against-internet-crimes-police-commissioner-ak-vishwanathan

கணினி வழி குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், இது தொடர்பாக சென்னையில் 10 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சர்வதேச கணினி பாதுகாப்பு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ’கணினி வழி குற்றங்கள்  தற்போது அதிகரித்து வருவதால், பொது மக்கள் உ‌ஷராக இருக்க வேண்டும். இளைஞர்களை குறி வைத்து ஆன்லைனில் பல்வேறு மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தொலைபேசியில் தொடர்பு கொண்டோ ஆன்லைன் மூலமாகவோ வங்கிக் கணக்குகள் தொடர்பாக யாரேனும் தகவல்களை கேட்டால் அதனை பொது மக்கள் கொடுக்கக் கூடாது.

பொது மக்கள் உஷாராக இருந்தால்தான் இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்க முடியும். சைபர் கிரைம் போலீசார் இணைய தள குற்றவாளிகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் இது தொடர்பாக 10,254 மனுக்கள் பெறப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 399 வழக்குகளில் தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close