எய்ட்ஸ் இல்லா தமிழகத்தை உருவாக்க உறுதியேற்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி

  அனிதா   | Last Modified : 30 Nov, 2018 04:04 pm

tamilnadu-for-aids-free-environment-chief-minister-palanisamy

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழ்நாட்டில்  எச்.ஐ.வி தொற்று இல்லாத நிலையை உருவாக்க உறுதியேற்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

மக்களிடையே எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் திங்கள் உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ‘எச்.ஐ.வி. பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பு பற்றி உங்கள் நிலையை அறியவும்‘ என்பதே இந்த ஆண்டிற்கான மையக் கருத்து. 

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தமிழகத்தில் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில், எச்.ஐ.வி தொற்றை கண்டறிய 2561 நம்பிக்கை மையங்களும், 15 நடமாடும் நம்பிக்கை மையங்களும், 2 எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு வாகனங்களும் செயல்பட்டு வருகின்றன. அத்துடள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 55 கூட்டு மருத்துவ மையங்களும், 194 இணை கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகின்றன. மேலும், எச்.ஐ.வி தொற்றுள்ள பெற்றோரிடம் இருந்து கருவில் உள்ள குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க அனைத்து கருவுற்ற பெண்களுக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்பெறும் வகையில், மாதந்தோறும் ரூ.1000 ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி தமிழ்நாட்டில் எச்.ஐ.வி தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்று, எச்.ஐ.வி தொற்று உள்ளவர்களை மனித நேயத்துடன் அரவணைத்து, அவர்களது தன்னம்பிக்கை வளர உதவிட வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.