பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்பு: ஹெச்.ராஜா மகிழ்ச்சி

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 05:38 pm

h-raja-tweet-about-pon-manickavel-period-extension

இன்று ஓய்வு பெறும் நிலையில் இருந்த ஐ.ஜி பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் பிரிவு சிறப்பு புலனாய்வு அதிகாரியாக ஓராண்டு பதவி சென்னை உயர்நீதிமன்றம் நீட்டிப்பு செய்ததற்கு பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன். மாணிக்கவேல் இன்றுடன் பணி ஓய்வு பெறுவதக அறிவிக்கப்பட்டது. அவர் சிலைகடத்தல் வழக்குகளில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருவதால் அவரின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் மற்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. 

இந்த சூழ்நிலையில், சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்தும் பொன்.மாணிக்கவேலின் சிறப்பு அதிகாரியாக ஓராண்டு பதவியில் தொடர்வார் என்றும் உயர்நீதிமன்றம் இன்று இரண்டு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இதற்கு தமிழகத்தில் உள்ள பல தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன். மாணிக்கவேலின் பதவி நீட்டிப்பு குறித்து தேசிய பாஜக செயலர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று ஓய்வு பெறும் நிலையில் இருந்த ஐ ஜி பொன் மாணிக்கவேல் அவர்களுக்கு சிலை கடத்தல் பிரிவு சிறப்பு புலனாய்வு அதிகாரியாக ஓராண்டு பதவி நீட்டிப்பு சென்னை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. மிக்க மகிழ்ச்சி அளிக்கின்ற விஷயம். வரவேற்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.