தமிழகத்தில் விலங்குகள் நலவாரியம் !

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 04:33 pm
animal-welfare-organization-in-tamil-nadu

தமிழ்நாட்டில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், மாநில விலங்குகள் நலவாரியம் அமைக்கவுள்ளதாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் விலங்குகள் நலவாரியம் அமைப்பதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ’விலங்கு வதைத் தடுப்பு சட்டம் 1960ன் பிரிவு 4ன் படி இந்திய விலங்குகள் நலவரியத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மாநில விலங்குகள் நல வாரியம் அமைக்கப்படுகிறது. தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தின் தலைவராக தமிழக முதலமைச்சர் பழனிசாமி இருப்பார். துணைத்தலைவராக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இருப்பார்.

மேலும், தலைமைச் செயலாளர், பல துறை செயலாளர்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாடு விலங்குகள் நலவாரியத்தின் நிர்வாக குழு தலைவராக கால்நடை பராமரிப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் இருப்பார். காவல்துறை கூடுதல் இயக்குனர், மாநகராட்சி ஆணையர், வனத்துறை அதிகாரிகளும் இந்த விலங்குகள் நலவாரியத்தின் உறுப்பினர்களாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close