நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 7ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

  ஐஸ்வர்யா   | Last Modified : 30 Nov, 2018 05:48 pm
neet-ug-2019-registration-deadline-extended-by-7-days

கஜா புயலால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசு தேசிய தேர்வு முகமைக்கு எழுதிய கடிதத்தையடுத்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கஜா புயலால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள டெல்டா மாவட்ட மக்கள், இன்னும் அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரவில்லை. வழக்கமான ஒரு நடைமுறைக்கு கொண்டுவர அரசு சார்பில்அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசுடன் இணைந்து பல்வேறு தனியார் அமைப்புகளும் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றன. 
 இந்த கஜா புயலினால் மாணவர்களின் நிலைமையும் மோசமாகியுள்ளது. படிப்பதற்கு புத்தகங்கள் கூட இல்லாத நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் அம்மாவட்டத்தைச் சேர்ந்த மேல்நிலை வகுப்பு மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தோ்வுக்கு மாணவா்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளா் ராதா கிருஷ்ணன் தேசிய தோ்வு முகமை ஆணையத்திற்கு (National Testing Agency) கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதையடுத்து நீட் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக தேசிய தோ்வு முகமை தெரிவித்துள்ளது. அதன்படி டிசம்பா் 7ம் தேதி வரை தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், டிசம்பா் 8ம் தேதி வரை தோ்வு கட்டணத்தை செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close