சிலைகடத்தல் வழக்கை முழுமையாக முடிக்காமல் விடமாட்டேன்: பொன்.மாணிக்கவேல் அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 05:46 pm
pon-manickavel-period-extended-next-one-year

இன்று ஓய்வு பெறும் நிலையில் இருந்த ஐ.ஜி பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் பிரிவு சிறப்பு புலனாய்வு அதிகாரியாக ஓராண்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பதவி நீட்டிப்பு செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், சிலைகடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த ஆணையையும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

இந்த உத்தரவிற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்.மாணிக்கவேல், "ஏற்கனவே இருந்த கம்பீரத்துடன், கூடுதல் வீரியத்துடனும், நம்பிக்கையுடனும் அளித்த வார்த்தைகளை தான் இப்போதும் கூறுகிறேன். கூடுதல் பொறுப்பை எந்த அளவுக்கு திறம்பட செய்ய முடியுமோ அதை செய்வேன். இப்போது என்னுடன் இருக்கும் எனது டீம் அப்படியே இருக்கும். எனது டீமில் யாருக்கும் லைட்டான தொந்தரவு வந்தால் கூட விட மாட்டேன். அவர்களுக்கு எதுவும் ஆகிவிடாமல், முழுக்க முழுக்க பொறுப்பு எடுத்துக் கொண்டு செயல்படுவேன்.

மக்களுக்காக நான் உழைக்க இருக்கிறேன். இப்படிப்பட்ட கடமையை செய்ய நான் சம்பளம் கூட வாங்காமல் வேலை பார்ப்பேன். தமிழகத்தில் 20,000 கொலை கேஸ்கள் இருக்கின்றன. இவற்றினை கூட சம்பளமே வாங்காமல் நான் பார்க்கத் தயாராக இருக்கிறேன்.

இனி சிலைத் திருடர்களை மொத்தமாக பிடிப்பதுதான் என்னுடைய முதல் வேலையே. இந்த வழக்கை முழுமையாக முடிக்காமல் விடமாட்டேன், முடித்தே தீருவேன். சென்னை உயர் நீதிமன்றம் இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை. நீதிமன்றம் எடுத்த முயற்சியால்தான் இந்த பணி நீட்டிப்பு சாத்தியமானது. முன்பை விட நான் வேகமாக வேலை செய்வேன்.

இனி கும்பகோணம் அல்லது திருச்சிதான் என் டார்கட். அங்கதான் தங்கி என் குழுவை விரட்டி வேலை பார்க்க போகிறேன். வெளிநாடுகளிலிருந்து அத்தனை சிலைகளும் தமிழகத்திற்கு வந்து சேரும் ஆஸ்திரேலியாவிலிருந்து 7 முக்கியமான சிலைகள் வரப்போகின்றன.

ஆனால், எங்களை மிக எளிதாக பார்க்கிறார்கள். ஒவ்வொரு கேசிலும் நிறைய சிக்கல்கள் உள்ளன. நான் சர்வீஸிலேயே இல்லாத சமயத்தில் நடந்த கேஸையெல்லாம் எடுக்கிறோம். பல வழக்குகளில் எப்.ஐ.ஆர் கூட இல்லாமல் இருக்கிறது. நான் என்னுடன் பணியாற்றுபவர்களுக்கு சார்ஜ் கொடுத்ததில்லை. அதை செய்ததே இல்லை. சத்தம் போடுவேன், மிரட்டி உருட்டி வேலை வாங்குவேனே தவிர யாருடைய வயிற்றிலும் அடிக்க மாட்டேன்.

நான் அவ்வளவு திட்டியும் நான் ஓய்வு பெறும் செய்தி அறிந்து காவலர்கள் பலர் என்னை சந்திக்க வந்தனர். அதை பார்க்கும் போது நான் ஓரளவு நன்றாகத் தான் வேலை செய்திருக்கிறேன் என நினைக்கிறன்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close