அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 30 Nov, 2018 06:02 pm
may-chance-for-rain

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த  24மணி நேரத்தில் ஒரு சில  இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாகவும் வடகிழக்கு பருவமழை காலங்களில் வீசும் கிழக்கு திசைக்காற்றின் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக  கும்பகோணத்தில் தலா 8செ.மீ மழையும்,
 ராமேஸ்வரம் பகுதிகளில் தலா 7செ.மீ மழையும், திருவிடைமருதூர் மற்றும் ஆடுதுறை பகுதிகளில் தலா 6 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 

தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகம் இருக்கும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close