லஞ்சம் வாங்கிய போக்குவரத்து ஆய்வாளர் கையும் களவுமாக பிடிப்பட்டார்

  ஐஸ்வர்யா   | Last Modified : 30 Nov, 2018 06:04 pm
traffic-police-arrested

சென்னை வளசரவாக்கத்தில் பறிமுதல் செய்த மோட்டார் சைக்கிளை விடுவிக்க 8 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து ஆய்வாளரை லஞ்ச ஒழிபுத்துறை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை வளசரவாக்கம் பகுதியில் சாலையோரம் கால்வாய் அமைக்கும் பணியை தனியார் நிறுவனம் எடுத்து நடத்தி வருகிறது. இதில் கண்காணிப்பாளராக வேலை செய்து வருபவர் தங்கதுரை. இவர் நேற்று முன்தினம் வளசரவாக்கம் பகுதியில் நடைபெற்று வந்த கால்வாய் அமைக்கும் பணியை மேற்பார்வை செய்து கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு வந்த வளசரவாக்கம் போக்குவரத்து ஆய்வாளர் ஐயப்பன், அப்பகுதியில் நடைபெறும் பணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறி தங்கதுரையிடம் முறையிட்டார். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதனையடுத்து ஆய்வாளர் ஐயப்பன் தங்க துரையின் இரண்டு சக்கர மோட்டார் வாகனத்தை பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு சென்றார். மேலும், காவல் நிலையம் சென்று முறையிட்ட தங்கதுரையிடம் அவரது வாகனத்தை விடுவிக்க 8 ஆயிரம் ரூபாய் பணம் லஞ்சம் கேட்டுள்ளார்.

 இதனால் ஆத்திரமடைந்த தங்கதுரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் ஜெய பாரதி தலைமையில் வந்த அங்கு வந்த காவல்துறையினர் தங்கதுரையிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பி ஆய்வாளர் ஐயப்பனிடம் கொடுக்கச் சொல்லி அனுப்பினர். தங்கதுரை அளித்த லஞ்சப் பணத்தை வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், போக்குவரத்து ஆய்வாளர் ஐயப்பனை கையும், களவுமாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக போக்குவரத்து ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close