தோல்வியில் முடிந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் பேச்சுவார்த்தை

  ஐஸ்வர்யா   | Last Modified : 30 Nov, 2018 06:22 pm
jacto-jio-protest

அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை என ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தாங்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினோம். ஆனால் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வரும் டிசம்பர் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று தமிழக அரசுடன் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

இதுகுறித்து ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் மற்றும் உ.மா. சுந்தரம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  “ எங்களின் எவ்வித கோரிக்கையையும் அரசு ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. முதல்வர் எங்களை அழைத்துப்பேச வேண்டும் என்பதற்கும் ஒப்புதல் தரவில்லை. உயர்மட்டக்குழுவில் நாளை விவாதித்து, இறுதி முடிவு எடுக்கப்பட்டு போராட்டம் குறித்து அறிவிக்கப்படும். தங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்ப்பதாக தெரியவில்லை. முதல்வர் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என இன்னும் நம்பிக்கை உள்ளது. முதல்வரிடம் இருந்து ஏற்புடைய பதில் வராதபட்சத்தில் அறிவித்தபடி போராட்டத்தை நோக்கி செல்வோம்” எனக் கூறினார்.

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close